ரஸ்ய படையினரின் கொடூர செயல் - வெளியாகிய காணொளியால் பரபரப்பு
Russo-Ukrainian War
Ukrainian Refugee
By pavan
உக்ரைன் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதாக வெளியாகிய காணொளி உக்ரைன் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுவதுடன் காலில் வெள்ளை நிற பட்டியணிந்தவர்களும் காணப்படுகின்றனர்.
அதேவேளை, ரஸ்ய படையினர் காலில் வெள்ளை பட்டி அணிவது வழமை அவர்கள் ரஸ்ய மொழியில் உரையாடுகின்றனர்.
ரஷ்ய படையினரின் கொடூர செயல்
இந்நிலையில் கையில்பாரிய கத்தியை வைத்திருக்கும் காலில் வெள்ளை பட்டி அணிந்த நபர் மஞ்சள்பட்டி அணிந்த நபரின் தலையை துண்டிக்கின்றார்.
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான கிரெமினாவிற்கு அருகில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்ய படையினரின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி