சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய யுவதி செய்த செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka Tourism
Russia
By Sumithiran
சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது ரஷ்ய யுவதி ஒருவர் உனவதுன சுற்றுலா காவல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் பெண் விசா விதிகளை மீறி உனவதுன பகுதியில் இரவு விடுதி போன்று உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் நாளை (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி