வானில் தீ பற்றி எரிந்த ரஷ்ய போர் விமானம் - வெளியான காணொளி காட்சிகள்..!
பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று, தீப்பற்றி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று ரஷ்யாவின் MiG-31 ரக போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தீப்பற்றியது.
தீ பற்றியதை தொடர்ந்து Rizh-Guba தீவுக்கு அருகில் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, மர்மன்ஸ்க் (Murmansk) பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தீப்பற்றி எரிந்து விழும் காட்சிகள்
Russian #MIG31 crashed in #Murmansk region
— Russian Market (@runews) April 26, 2023
pic.twitter.com/I3ndb3RdDe
இதில் போர் விமானத்தின் விமானிகள் இருவரும் பத்திரமாக உயிர் தப்பினர் என்றும், உலங்குவானூர்தியின் உதவி கொண்டு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் MiG-31 போர் விமானம் வானில் தீப்பற்றி எரிந்து விழும் காட்சிகள் இணையதளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவமானது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து மீண்டும் தீவிர தன்மையை பெற்று வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது.
