ஐஎம்எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய சிறிலங்கா அரசாங்கம்: அம்பலப்படுத்திய ஆய்வு நிறுவனம்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (Sri Lanka IMF) நிபந்தனைகளுள் 30 வீதமானவற்றை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக வெரித்தே ஆய்வு நிறுவனம் (Verité Research) சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளே இவ்வாறாக இதுவரை நிலுவையில் உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாம் கட்ட நிதியுதவி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கப்பெறும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த கடன் உதவி தொடர்பான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம்
இந்த நிலையில், நிதியத்தின் நிபந்தனைகளுள் 30 வீதமானவற்றை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, நீதியை நடைமுறைப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |