இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lankan political crisis
By Sathangani
இலங்கையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மேலும் ஐந்து அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கத் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டிற்காக ஐந்து கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகச் செயற்படத் தகுதி பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 85 கட்சிகள்
சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி என்பன புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சேர்க்கையுடன், இலங்கையில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி