ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய இலங்கை வீரர்
Sri Lanka Cricket
Sri Lankan Peoples
By Dhilak
இலங்கை அணியின் சிறந்த வீரரான பதும் நிசங்க டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
பாரிய சவால்
அதேவேளை, பதும் நிசங்கவிற்கு பதிலாக ஷேவோன் டேனியலை ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடுவதற்கு கிரிக்கெட் தேர்வுக்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பதும் நிசங்க விலகியுள்ளமை இலங்கை அணி பாரிய சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி