இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்
Sachin Tendulkar
India
By Raghav
இந்திய (India) கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு (Sachin Tendulkar) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
பி.சி.சி.ஐயினால் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடிய டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர்
இந்நிலையில், இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த சச்சினுக்கு 2024ஆம் ஆண்டின் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பி.சி.சி.ஐ வழங்கவுள்ளது.
மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ இன் 'நமன்' விருதுகள் நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்