இலங்கை வீரரின் அற்புதமான பிடியெடுப்பு : வைரலாகும் காணொளி
Colombo
Sri Lanka Cricket
Viral Video
Afghanistan Cricket Team
By Sumithiran
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம அற்புமான பிடியெடுப்பை மேற்கொண்டு எதிரணி துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்த காணொளி வைரலாகி வருகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
முன்னதாகவே கணித்த விக்கெட் காப்பாளர்
இந்த நிலையில் ஆப்கான் அணியின் வீரர் ரஹ்மத் ஷா 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரபத் ஜெயசூரியா ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார்.
Phenomenal take by Sadeera Samarawickrama to dismiss Rahmat Shah ? #SLvAFG pic.twitter.com/58O6FVHLAE
— Estelle Vasudevan (@Estelle_Vasude1) February 2, 2024
அதனை முன்னதாகவே கணித்த விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம, நொடிப்பொழுதில் இடதுபுறம் நகர்ந்து பிடியெடுப்பை மேற்கொண்டார். இது தொடர்பான காணொளி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்