சஜித் பிரேமதாசவிற்கு இன்றுகாலை தடைவிதித்த பொலிஸார்
police
colombo
sajith premadasa
band
By Sumithiran
ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவேளை கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களை சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
கைதாகிய ஆசிரியர்கள் அதிபர்கள் என 44 பேர் தற்போது தடுப்பில் வைக்கப்பட்டுள்ள துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர் சென்றனர்.
இதன்போது அவர்களை வழிமறித்த பொலிஸார், அவர்களை சந்திக்க இடங்கொடுக்கவில்லை. மாறாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை இன்று பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பதிலளித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி