எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது - சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 'பகிர்ந்தளிக்க மட்டுமே' தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிகின்றனர்.
சஜித் பிரேமதாச நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கின்றாரே தவிர, தனது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ அல்ல என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரம்
இன்று (24) வெலிஓயாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியிருந்தார். மேலும் உரையாற்றிய அவர்,
“மக்களுக்காக எதுவும் செய்யாது தம்பட்டம் அடிப்பவர்கள் எதையுமே செய்ய நினைப்பதில்லை. பொய்யான பாசாங்குளைப் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பேருந்துகளில் தங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஸ்டிக்கர்களாக ஒட்டி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பேருந்தையேனும் வழங்க அவர்களால் முடியவில்லை.
ஆனாலும், பாடசாலை மாணவர்களுக்கு நான் பேருந்து வழங்கும்போது, 'பஸ் மேன்' என்று தன்னை விமர்சிக்கின்றனர்.
எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
