மைத்திரி செய்த பாரிய உதவி - நினைவு கூர்ந்த சஜித்
நல்லாட்சி அரசின் காலத்தில் தான் ஒரு அமைச்சராக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மற்றவர்களிடமிருந்து பல தடைகளை எதிர்கொண்டதாகவும் ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு உதவக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் கிரிந்த பகுதியில் எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் போது பேசிய பிரேமதாச, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஆட்சிக் காலப்பகுதியில் மற்றவர்கள் தனது வேலையை நாசப்படுத்த முயன்றபோது முன்னாள் ஜனாதிபதி தனக்கு ஆதரவளித்ததாகவும், தான் வேலை செய்ய பணம் ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு மாற்றாக இருக்கும் பிரதான அரசியல் சக்தியின் தலைவராக இன்று அரசியலில் வித்தியாசமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் தனது காலை இழுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.