ஜனாதிபதி தேர்தலில் 3ஆம் இடத்தில் சஜித் பிரேமதாச - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பின்னடைவை சந்தித்தள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சஜித் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைதற்காக அங்கும் இங்கும் தகவல்களை அனுப்பி வருவதாகவும் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
ஏதேனும் கொடுக்கல் வாங்கல்
இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக எமக்கு தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) அநுரகுமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.
அனுரவும் ரணிலும் ஒன்றாக இருந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது நன்றாக புலப்படுகின்றது.
சஜித்தால் அநுரவை தோற்கடிக்க முடியாது என ரணில் கூறுவதாக இருந்தால் ரணிலால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கே தெரிந்து இருக்கின்றது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |