ஈரான் அதிபர் உயிரிழப்பு: தூதரகத்துச் சென்று இரங்கல் தெரிவித்த சஜித்
அஜர்பைஜான் எல்லையில் சில நாட்களுக்கு முன்னர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் (Hossein Amir-Abdollahian) உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (22) கொழும்பிலுள்ள (Colombo) ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.
திடீர் உயிரிழப்பு
ஈரான் அதிபர் உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய நட்டமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஈரானும் இலங்கையும் நெடுகாலமாக நட்போடு திகழ்கின்றன. இலங்கையின் அபிவிருத்திக்கு அவர் பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார்.
விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ஈரான் தூதுவரிடம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |