சிஐடிக்கு அழைக்கப்பட்ட சஜித்! உறுதிப்படுத்திய எம்பி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை குற்றப்புலனாய்வு துறை (CID) அழைத்ததாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அக்கட்சியின் நாடாமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருண கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “பிரேமதாசாவிடம் நேரடியாகக் கேட்டேன்.அவர் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், பொதுமக்கள் நிதியை பயன்படுத்தி யூ.என்.பி தலைமையகம் சிறிகொத்த பழுது பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சாட்சியமளிக்க CID அழைத்ததாக செய்திகள் வந்திருந்தன.
சந்தேகத்துக்குரிய நிலை
ஆனால் அவர், CID ஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை என்று தெளிவாகச் சொன்னார். இது மிகவும் சந்தேகத்துக்குரிய நிலையாக உள்ளது,” என ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த அரசியல்வாதியொருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற ஊகங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்கப்பட்டபோது,
அதுபற்றி தமக்குத் தெரியாது என்றும், “அடடா! அது நானா? எனக்கே ஒன்றும் தெரியவில்லை,” என்று ஹர்ஷன ராஜகருண நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
