வாக்குப்பதிவினை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சற்று முன்னர் வாக்களித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவும் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் (Jalani Premadasa) இணைந்து வாக்களிப்பதற்காக வருகை தந்திருந்தனர்.
ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கொடுவேகொட விவேகாராம விகாரையின் சந்திரரத்ன பாலர் பாடசாலை மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் அவர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்திருந்தனர்.
நாட்டு மக்களுக்கு வாய்ப்பு
இங்க கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும், நீதி நியாயமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்டட்டும்.
கிராமங்களினதும் நகரங்களினதும் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்க இந்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன்.
மக்கள் எடுக்கும் முடிவு
ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு, கிராமங்களைக் கட்டியெழுப்பி, நகரங்களைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் செய்தியை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். தீர்மானம் எடுக்க வேண்டியது மக்களே.
எனவே, சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயகம் மிக்க தேர்தலுக்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். மக்கள் எடுக்கும் முடிவுக்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும்.தேர்தல் சட்டங்களை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஜனநாயகத்தை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
