மீண்டும் அரசியல் விவாகரத்துக்கு இடமில்லை! சஜித் - ரணில் தொடர்பில் அஜித் எம்.பி உறுதி
மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டுப் பட்டியலை சஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமர்ப்பிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
"ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அடுத்த தேர்தல்களில் ஒரே பட்டியலில் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து விவாதத்திற்குரியது அல்ல.
மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தல்கள் நாட்டிற்குத் தேவை, மக்களுக்கும் அவை தேவை. மக்களின் பணத்தை நியாயமாகச் செலவிடுவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு அவசியம்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய நாங்கள், மாகாண சபைகளுக்கான ஒருங்கிணைந்த பட்டியலை நிச்சயமாக முன்வைப்போம்.
பிளவு என்ற பிரச்சினை எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். எங்களுக்கிடையிலான சில பிரச்சினைகள் காலப்போக்கில் தீர்க்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
