கோட்டாபய அரசுக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை ஏவத் தயாராகும் சஜித் தரப்பு
srilanka
sajith
mahinda
fuel
gota
By S P Thas
விரைவில் எரிபொருள் விலையை குறைக்காதுவிட்டால் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்குவோம் என்று சஜித் தரப்பினர் முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் விலையை குறைக்காத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக எதிர் கட்சியினரிடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் மக்கள் கொதித்துப் போயிருப்பதாகவும், விரைவில் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடுமையாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
you may like this
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்