அநுரவின் தேர்தல் கருத்துக்கு சஜித் கடும் கண்டனம்
திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பொத்துவில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ ஜனாதிபதி யாரையும் பாரபட்சமாக நடத்த முடியாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி அவ்வாறு கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.
அநுரவின் கருத்து
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார். அவ்வாறு இல்லாது ஜே.வி.பிக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை.
ஜனாதிபதியானவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
