ரணிலின் மாநாட்டை புறக்கணிக்கும் சஜித்...! கசிந்த தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்து கொள்ள மாட்டார் என தகவல் கசிந்துள்ளது.
கடந்த (6) ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு மாநாடு ரணில் விக்ரமசிங்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று உட்கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குழு கலந்து கொள்ள உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
