காசா நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய படை! கால்நடையாக வெளியேறும் பொதுமக்கள்
Israel
Israel-Hamas War
Gaza
By Dharu
காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில் கால்நடையாக, தங்கள் குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு பிராந்தியத்தை விட்டு வெளியேறிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரின் வடக்குப் பகுதியில் தனது ஆயுதங்கள், இராணுவ வாகனங்களை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தெற்கு நோக்கி மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் காசா நகரில் 150 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகிறது.
தரைவழி தாக்குதல்
இதன்படி ஹமாஸ் பணய கைதிகளாக வைத்திருப்பவர்களை மீட்கவே இந்த தரைவழி தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் ஆறு இலட்சத்துக்கும் அதிகாமானோர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கையை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
