உக்ரைன் போர் நிறுத்த வாக்குறுதி: புடினால் ஏமாற்றப்பட்ட ட்ரம்ப்
ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தன்னை ஏமாற்றி விட்டார் என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு உத்தயோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் டெனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிக்கலான விவகாரங்கள்
இதன்போது உக்ரேன் மற்றும் காஸா போர் உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் விளாடிமிர் புடினுக்கு அனைத்துலகச் சமூகம் அழுத்தம் தர வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்த நிலையில், அதற்கு டெனால்ட் ட்ரம்ப் செவிசாய்த்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், போரை நிறுத்தத்திற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகும், விளாடிமிர் புடின் தொடர்ந்து போரில் ஈடுபடுவது குறித்து ட்ரம்ப் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் விலை
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், “புடினுடனான எனது உறவின் காரணமாக உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதானது என்று நான் நினைத்திருந்தேன்.
ஆனால், அவர் உண்மையில் என்னை ஏமாற்றிவிட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எண்ணெய் விலை குறைந்தால் புடின் போரிலிருந்து விலகிவிடுவார் என தெரிவித்த ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
