தீயாய் வெடித்த மன்னார் காற்றாலை விவகாரம்: கொழும்பில் போராட்டத்தில் குதித்த நூற்றுக்கணக்கான மக்கள்
கொழும்பில் (Colombo) காற்றாலை திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (12) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 47 நாட்களாக மன்னாரில் (Mannar) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த போதும் இது குறித்து அரச தரப்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
முறையான நடவடிக்கை
இந்தநிலையில், முறையான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கொழும்பில் போராட்டத்தை முன்னெடுப்போம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் நேற்று (18) அறிப்பொன்றை விடுத்து இருந்தார்.
இந்த பின்னணியில் இன்று (19) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை மக்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிராக எழுதிய பதாகைகளை ஏந்திய நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தக்க தீர்வு
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில், “இதற்கு ஒரு முடிவு காணமாமல் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை.
மழையானாலும் வெயிலானாலும் எங்களுக்கு இதற்கான தக்க தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு விலக மாட்டோம்.
இன்று அரசாங்கம் எங்களுக்கு இதற்கான நல்ல முடிவை கட்டாயம் பெற்று தர வேண்டும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









