தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது
இலங்கை விமானப்படை புலனாய்வு (Sri Lanka Airforce) அதிகாரி தங்கம் கடத்த முயற்சித்த வேளை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று (18) விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் தங்கக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதானவர் என தெரியவந்துள்ளது.
40 தங்க பிஸ்கட்டுகள்
குறித்த சந்கே நபர் பணியாளர் நுழைவாயில் வழியாக வருகை முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் உடல் ஸ்கானர் மூலம் அவரை பரிசோதித்தபோது, அவரது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தநிலையில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேவேளை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
