வேலணை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வெடித்த கலவரம்!
வேலணை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வேலணை துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (19) காலை 10.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது அமைப்புக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் விவாதித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக துறையூர் மீன் சந்தையின் குத்தகை மற்றும் வரி அறவீடு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
வரி அறவீடு
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை வரி அறவீடு செய்ய வலியுறுத்தியதுடன் அது தொடர்பிலான சபையின் சுற்றுநிரூபங்களையும் காண்பித்துள்ளனர்.
இருப்பினும், குறித்த சந்தை இறங்குதுறை என்றும் தாம் வரி அறவீட்டை எதிர்ப்பதாகவும் தமது அறுவடை மீன்களை விற்க இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுருத்தியுள்ளனர்.
இதனால் உறுபினர்களுக்கும் மற்றும் சந்தையின் சார்பான அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம்
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் சந்தை சாரிலான சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் இருந்த இருக்கை நோக்கி எழுந்து சென்றதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதேச செயலர் மற்றும் அதிகாரிகள் சென்று குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், வேலணையின் தீரா பிரச்சினையாக உருவெடுத்துள்ள குறித்த துறையூர் சந்தையின் தீர்வுக்காக பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தலைமையில் கடற்றொழில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து விசேட குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
