ரணிலின் சதியில் வீழ்த்தப்பட்ட சஜித்தின் முக்கிய விக்கெட்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Harshana Rajakaruna
Ajith Mannapperuma
By Sumithiran
6 months ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe) சதியால் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பகா மாவட்ட வேட்பாளரான அஜித் மன்னப்பெரும (ajith mannapperuma) கட்சியிலிருந்து விலகியதாக அந்த மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(harshana rajakaruna) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்தை அஜித் மன்னப்பெரும அண்மையில் கொண்டிருந்ததாகவும், சஜித் பிரேமதாசவிடம் (sajith premadasa) அவர் தன்னை அர்ப்பணிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் சதியால் தேர்தலில் இருந்து விலகிய மன்னப்பெரும
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கொண்ட சதியின் ஒரு அங்கமாகவே மன்னப்பெரும பொது தேர்தலில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
