தொடரும் சம்பள பிரச்சினை: எடுக்கப்படவுள்ள தீர்மானம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இது தொடர்பான பிரேரணையை நேற்று (13) கூடிய அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து, பிரேரணையில் உள்ள விடயங்களுக்கு நிதி அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரேரணை
இதன்படி, நிதியமைச்சின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் அது தொடர்பான பிரேரணையை மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |