ஏப்ரல் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி
2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத் திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்கள்
குறித்த யோசனையைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை கீழ் காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
1. அரச சேவையின் சம்பளத் திருத்தத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குதல்.
2. அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குதல்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
