அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை! பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவித்தல்
மறுக்கும் பிரதமர் அலுவலகம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறைக்கப்படும் ஒதுக்கீடு
இந்த நிலையில், வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன.
அதுமாத்திரமல்லாது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்