ஒன்லைன் மூலம் வீடுகளுக்கே மதுபானங்கள்! GMOA போர்க்கொடி
corona
sri lanka
people
By Shalini
ஒன்லைன் மூலம் வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சி எனவும் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் நாளொன்றிற்கு சுமார் 60 வரை பதிவாகின்றன.
அதேபோல் மதுபான பயன்பாட்டினால் நாளொன்றிற்கு 63 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்பதையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கின்றார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை உரிய முறை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்று இல்லாத சூழ்நிலையில், மதுபான விநியோகம் தொடர்பில் இவ்வாறான தீர்மானமொன்று எட்டப்பட்டமையானது, வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி