இணைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரிகள்
மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு பாதாள உலகக் கும்பலின் தலைவர்களான கமாண்டோ சாலிந்த மற்றும் கெஹல்பத்தர பத்மே ஆகியோர் இணைய நிகழ்ச்சியொன்றில் நேரடியாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தென்னிலங்கை பத்திரிகையாளர் ஒருவரின் இணைய நிகழ்ச்சியில் அவர்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற அவர்கள், தாங்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எந்த நாட்டில் இருக்கிறார்கள்
மேலும், அவர்கள் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இதன்படி கனேமுல்ல சஞ்சீவ படுகொலை உட்பட பல குற்றச் செயல்களுக்காக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மனுதினு பத்மசிறி பெரேரா மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கடந்த 9ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், அவருடன் மற்றொரு குற்றவியல் கும்பல் உறுப்பினரான கமாண்டோ சாலிந்தாவும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டடை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
