வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!
Vavuniya
SL Protest
Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani
அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமைகளை உறுதிசெய்யுமாறு கோரி வவுனியாவில் (Vavuniya) கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் சமஉரிமை இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (12) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலியுறுத்தப்பட்ட விடயங்கள்
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





1ம் ஆண்டு நினைவஞ்சலி