துறவி என கூறிக்கொண்டு பலகோடி ரூபாய் சொகுசு வாகனத்தில் பிக்கு: சமூக வலைத்தள காணொளியால் சர்ச்சை
விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை அரஹந்தர் எனக் கூறிவரும் பிட்டிதுவே சிறிதம்ம தேரர் எனப்படும் சிறி சமந்தபத்ர தேரர், சுமார் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனத்தில் பயணிப்பதைக் காட்டும் காணொளியே இவ்வாறு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத் தோல் இருக்கைகள், LED விளக்குகள் மற்றும் நவீன உட்புற வசதிகளைக் கொண்ட வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை
அந்த வாகனம் ஜனாதிபதி ஒருவர் பயணிக்கும் தரத்திலானது எனக் காணொளியில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, V8 ரக வாகனங்களில் கால்களை நீட்டி வசதியாக அமர முடியாது எனக் குறிப்பிடும் தேரர், நாளொன்றுக்கு 1,000 முதல் 2,000 கிலோமீற்றர் வரை பயணிக்கும்போது கால்களில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்காகவே இந்த வாகனம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனத்தின் இருக்கை அமைப்புக்காக மாத்திரம் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் காணொளியில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேரரின் செயற்பாடுகள் குறித்து பௌத்த மதத் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |