சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் பேரூர் ஆதினம் அவர்களுடன் சந்திப்பு
india
meeting
samathaparty
By Sumithiran
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் பேரூர் ஆதினம் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை அவர்கள் விவரித்தனர்.
இது குறித்து சுமார் ஒரு மணிநேரம் குழுவினருடன் பேரூர் ஆதினம் விவாதித்தார். இதுகுறித்து சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என்.ஏ. கோன் கூறியதாவது: பேரூர் ஆதினம் அவர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை துல்லியமாக புரிந்து வைத்துள்ளார்கள். எமது முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள்.
மேலும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கடிதம் அவரிடம் கையளிக்கப்பட்டது.