பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் !
புதிய இணைப்பு
பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் கைது
இருப்பினும், ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்யவில்லையென இரா.சாணக்கியன் நேற்றைய தினம் (06) நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து இன்று (07) சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.
கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு போலி முகநூல் ஊடாக முகம் சுளிக்கும் வகையில் பதிவுகளை மேற்கண்ட நபர் இன்று சட்டத்தின் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (Shivanesathurai Chandrakandan) கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) குற்றம் சுமத்தியுள்ளார்.
இவரை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இரா. சாணக்கியன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் (Sushil Premajayantha) நேரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (06) விசேட கூற்றை முன்வைத்து இவ்வாறு கேள்வி எழுப்பிய இரா. சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் (Gopinath) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம்
இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார் அத்தோடு இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த ஆசிரியரை காவல்துறையினர் இன்று வரை கைது செய்யவில்லை தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
காவல்துறையினரின் கடமை இதுவல்ல கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.
இந்த மாணவியிடம் 'நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார் அத்தோடு இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை இது தேசிய பாடசாலை ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “சபாநாயகரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன் கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |