சம்பத் மனம்பேரியின் மைத்துனர் துப்பாக்கி,ஹெரோயினுடன் சிக்கினார்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாதாள உலக தலைவர்களில் ஒருவரான பெக்கோ சமனின் அனைத்து நிதி விவகாரங்களையும் நிர்வகித்துவந்த சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று(04) மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்காக தயாராக இருந்த 555 கிராம் ஹெரோயின், கைத்துப்பாக்கி மற்றும் மகசின் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் அறிவுறுத்தலின் பேரில் அதன் பொறுப்பதிகாரி லிண்டன் சில்வா முன்னெடுத்து வருகிறார்.
ஏற்கனவே சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளமை மேலும் பல விடயங்கள் வெளிவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
