முள்ளிவாய்க்கால் பதாகையை கழற்றி சென்ற காவல்துறை!
சம்பூர் - கடற்கரைச்சேனை பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையை காவல்துறையினர் கழற்றி சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கிளை ஏற்பாட்டில் இன்று (17) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
அத்தோடு, முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபமேற்றி மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
காவல்துறையினருடன் வாய்த்தர்க்கம்
நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாக இருந்த நேரத்தில் , காட்சிப்படுத்தப்பட்ட பெனர் பிரச்சினைக்குரியதென அவ்விடம் வந்த சம்பூர் காவல் நிலையத்தின் உதவி காவல்துறை பரிசோதகர் தெரிவித்து பதாகையை கழட்ட முற்பட்டபோது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களுக்கும் குறித்த காவல்துறை அதிகாரிக்குமிடையில் சிறிய வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பதாகை காவல்துறை அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் பின்னரே சம்பூர் - கடற்கரைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
