ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச வலியுறுத்து
Namal Rajapaksa
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
By Dhilak
இன்னும் ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும் என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வழங்கவுள்ளோம்.
அநீதிகள்
அத்தோடு பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் இந்த முன்மொழிவுத் தொடரை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, இன்னும் ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும், நிவாரணத் தொகையை அவசரமாக நடைமுறைப்படுத்துவதால் சில அநீதிகள் ஏற்படுவதோடு சிலர் அவதியுறுவார்கள்” என்றார்.