முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய மக்களிடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய மக்களிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நல்லதொரு நாட்டுக்காக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்கள் இன, மத, ஜாதி மற்றும் கட்சி அரசியலுக்கு அமைய பிளவடைந்துவிடக் கூடாது. கடந்த ஒரு மாத காலமாக இலங்கையர்கள் அனைவரும் அமைதியான முறையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
எல்லா விடங்களுக்கும், எல்லோருக்கும் ஓர் எல்லையுண்டு நாம் அந்த எல்லையை எட்டியுள்ளோம். நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவமானது அப்பாவி மக்களின் வேதனைகளின் வெளிப்பாடு மற்றும் தேவையற்ற ஒடுக்குமுறைகளின் காரணமாகவே வெடித்தது.
அமைதியான முறையில் போராட்டம் நடாத்த வேண்டும் எனவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். எமது சகோதர சகோதரிகளை தாக்க வேண்டாம்.
இது கிளர்ச்சி அல்ல எனவும் இது சரியான தீர்மானத்திற்காக குரல் கொடுப்பது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூரிய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
