விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த : சி.ஐ.டி'யிடம் ஒப்படைக்கப்பட்ட சாரதியின் தொலைபேசி
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான காவல்துறை உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
விபத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதியின் கையடக்க தொலைபேசி கந்தானை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
விளக்கமறியல் உத்தரவு
அத்தோடு, குறித்த கையடக்க தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க காவல்துறையினரின் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |