இரா. சம்பந்தனின் அஞ்சலி இடத்தில் காவல்துறையினரின் அராஜகம்!
தமிழ் மக்களினுடைய தலைவர்கள் மீதான மரணத்தில் கூட வன்மத்தை பிரயோகிக்கின்ற அரசாக சிறிலங்கா அரசாங்கம் காணப்படுகின்றதாக அருணாசலம் வேழமாலிகிதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மறைந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு (R. Sampanthan) அஞ்சலி செலுத்தும் முகமாக கிளிநொச்சி (Kilinochchi) - அக்கராயன் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்தநிலையிலே, சம்பந்தனின் அஞ்சலிக்கு காவல்துறையினர் தமது வன்மத்தை வெளிப்படுத்துவதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
சம்பந்தனின் மரணம் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கறுப்புகொடிகளை அகற்றுமாறு காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஒரு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை எனவும், தமிழ் தலைவர்களுக்கு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அருணாசலம் வேழமாலிகிதன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |