வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

By Erimalai Nov 01, 2025 10:18 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக மணல் மண் கொள்ளை இடம்பெற்றுவருகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோதமான மணல் மண் அகழ்வு இடம்பெற்றுவருவதை தொடர்ந்து கடந்தமாதம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் குறித்த பகுதிகளை பார்வையிட்டு தொடர்சியாக மணல்மண் கொள்ளையில் ஈடுபடுவோரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் சில நாட்கள் மணல் மண் கொள்ளை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பதினைந்து நாட்களுக்கு மேலாக மணல் கொள்ளை இரவு பகலாக இடம்பெற்று வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அதிகளாவான மணல் மண் கொள்ளை

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளான தாழையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி, குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, குடத்தனை கிழக்கு, போன்ற பகுதிகளிலேயே அதிகளாவான மணல் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.

இயற்கை சமநிலையை பேனுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் பகுதிகளிலும் பாரிய மணல் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sand Looting Continues In Vadamaradchi East

குறித்த மணல்மண் கொள்ளை 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் வீதிகளில் தரித்து நிற்கின்ற வேளைகளில் கூட இடம்பெற்று வருகின்றது.

தாழையடி பிரதேசத்தில் இடம்பெறும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்திற்கும் மருதங்கேணி காவல்நிலையமும் சுமார் 1கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அவ்வாறிருந்தும் இவ்வாறு மணல் கொள்ளை இடம்பெறுகின்றது.

இவ்வாறு மணல் மண் கொள்ளை இடம்பெறும் பகுதிகள் பாரிய நீர்த்தேக்கங்களாக காட்சியளிக்கின்றன. இவ்வாறான மணல் மண் அகழும் பிரதேசங்களில் குடியிருப்புக்கள் பல உள்ளன. அந் நீர்த்தேக்கங்களால் மழை காலத்தில் சிறுவர்கள் உயிரிழக்கக் கூடிய அபாயமும் உள்ளது.

பேருந்து கட்டணங்களில் மாற்றம் தொடர்பில் தகவல்

பேருந்து கட்டணங்களில் மாற்றம் தொடர்பில் தகவல்

மண் மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (K.Ilankumaran) இச்சட்டவிரோதமான மணல் மண் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாபியாக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லை. மாறாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்து இனந்தெரியாத மண் மாபியா கும்பல்கள் மிரட்டுவதும், நேரடியாக அச்சுறுத்துவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரது தாயர் வீட்டுக்கு சென்ற ஒருவர் அவர் அங்கு இல்லாத நிலையில் அவ்வீட்டின் கேற்றை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sand Looting Continues In Vadamaradchi East

இன்னுமொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய உறவினர் என்றும் அவர் ஒருபோதும் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் நேரடியாக ஊடகவியலாளர் ஒருவரிடம் சவால் விடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் பல சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் பலர் தமது மணல் மண் வளம் கொள்ளையிடப்படுவது தொடர்பாக துணிந்து கருத்து சொல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

குறித்த மணல் மண் மாபியாக்கள் பலரை இதுவரை அச்சுறித்தியுள்ளனர். ஆனால் எவரும் முறைப்பாடு செய்வதற்கு கூட அச்சப்படுகின்றனர். எனவே வடமராட்சி கிழக்கின் வளங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட குருந்தூர் மலை : பௌத்த துறவியின் மோசடி அம்பலம்

திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட குருந்தூர் மலை : பௌத்த துறவியின் மோசடி அம்பலம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026