ரயிலில் பயணித்த சுற்றுலா பயணி மீது செருப்பு வீச்சு
Sri Lanka Tourism
Sri Lanka
By Sumithiran
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வது சகஜமாகிவிட்டது.
அண்மையில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து ரூ. ஆறு மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் உனவட்டுனவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சோதனை
இதேபோன்ற பல்வேறு சம்பவங்களை சுற்றுலா பணிகள் எதிர் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, இதே போன்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான காணொளி சமுக ஊடகங்களில் பரவி வருகிறது.
சுற்றுலா பயணி மீது செருப்பு வீச்சு
ரயிலில் பயணிக்கும் வௌிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது ரயில் பாதைக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் தனது காலணியால் தாக்குவது பதிவாகியுள்ளது.
பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி