சங்கக்காரவின் நெருங்கிய உறவினரின் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
Kumar Sangakkara
Kandy
Sri Lanka Police Investigation
By Sumithiran
சிறி லங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின்(Kumar Sangakkara) நெருங்கிய உறவினரின் வீடு தீப்பற்றி எரிந்து நாசமானது.
கண்டி, பூ வெலிக்கடை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடிகளை கொண்ட வீடே நேற்றிரவு தீப்பிடித்துள்ளது.
தீயினால் வீட்டிற்கு பாரிய சேதம்
கண்டி(kandy) மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் தீயினால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது வீட்டிற்குள் யாரும் இல்லை.இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்