பயணக்கட்டுப்பாட்டை மீறி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற தென்னிலங்கைக்கு தப்பிச் சென்ற குழு!
vaccine
sri lanka
people
By Shalini
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி காலிக்குச் சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு காலிக்கு அனுப்பப்பட்டதாகவும், ஏற்கனவே விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் போது இதை தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்