எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்": சிறீதரனின் பதிவு

Rajiv Gandhi S. Sritharan Sri Lanka Chennai India
By Shadhu Shanker Feb 29, 2024 02:15 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது. ” என தமிழரசுகட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விடுதலையாகி சிறப்பு அகதி முகாமிலிருந்த சாந்தன் நேற்றையதினம்(28)தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாந்தனின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது! இராபர்ட் பயஸ் ஆதங்கம்

சாந்தனின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது! இராபர்ட் பயஸ் ஆதங்கம்

"சாந்தன்" என்னும் உயிர்

இந்நிலையில், தமிழரசுகட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்": சிறீதரனின் பதிவு | Santhans Death Condolence Message Sridharan Eealam

குறித்த பதிவில், “இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது.

தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறைமீளப் போராடி, விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி, அந்த ஏக்கம் தீராமலேயே உயிரிழந்திருக்கிற செய்தி, அத்தனை தமிழர்களையும் உறையவைத்திருக்கிறது.

இருபது வயது இளைஞனாக சிறைசென்ற தன்மகன், என்றோ ஓர் நாள் தாய்மடி சேர்வான் என்ற, சாந்தனின் தாயாரின் 33 வருடக் காத்திருப்பு பொய்த்துப்போய்விட்டது என்பதைத்தான் அத்தனை இலகுவாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தாயாரின் 33 வருடக் காத்திருப்பு

தன் இளமைக்காலக் கனவுகளையும், வாழ்வையும் சிறையறைக்குள் குறுக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தின் நீட்சியில், கடந்த 2022.11.11 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னரான இந்த ஒன்றரை ஆண்டுகளில், தாய்முகம் காணவும் தாயகம் சேரவும் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய், உயிரற்ற உடலமாய் சாந்தன் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டமை நான் உட்பட, ஒரு இனமாக எம் ஒவ்வொருவரையும் இயலாமையின் விளிம்பில் கூனிக்குறுகி நிற்கவைத்திருக்கிறது.

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்": சிறீதரனின் பதிவு | Santhans Death Condolence Message Sridharan Eealam

இந்த இறுதிநாட்களில் எது நிகழக்கூடாது என நினைத்தோமோ அந்தக் கொடுந்துயர் நிகழ்ந்திருக்கிறது. தன் ஆயுளின் அரைவாழ்நாளை மகனுக்கான காத்திருப்பிலேயே கழித்த ஒருதாயின் கனவு கானல்நீராகக் கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.

அந்தத்தாயின் கண்ணீரின் கனதி, இது இரங்கலோடு கடந்துசெல்லும் இறப்புச் சம்பவமல்ல என்பதை வரலாறு தோறும்  எங்களுக்கு இடித்துரைத்த வண்ணமே இருக்கும். ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, எனது தனிப்பட்ட மற்றும் பதவிநிலை இயலுமைகளின் எல்லா எல்லைகளைக் கடந்தும் சாந்தனின் விடுதலைக்கான சில முயற்சிகளை, பல அழுத்தங்களை நானும் முன்னெடுத்திருந்தேன்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரத்துசெய்ய உடன்படுகிறோம்! மன்றில் அறிவித்த சட்டத்தரணி

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை இரத்துசெய்ய உடன்படுகிறோம்! மன்றில் அறிவித்த சட்டத்தரணி

மாவீரன் சாந்தன்

பலதரப்பு அழுத்தங்கள்,  கோரிக்கைகள் எல்லாவற்றினதும் கூட்டிணைந்த வடிவமாக இருநாட்டு சட்ட நடைமுறைகளின் நெடுநாளைய இழுபறி நிலைக்குப் பின்னர், நாடு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, பயண ஒழுங்குகளும் திட்டமிடப்பட்டு எல்லோரது வேண்டுதல்களும் கைகூடவிருந்த கடைசித் தருணத்தில் சாந்தனின் இறப்பு நேர்ந்திருக்கிறது.

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்": சிறீதரனின் பதிவு | Santhans Death Condolence Message Sridharan Eealam

எந்தச் சமரசங்களுக்கும் உட்படுத்த முடியாத வகையில், ஈழத்தமிழினத்தின் ஏதிலித்தனமும், அதிகாரமற்ற கையறுநிலையும், சாமான்யர்களின் உணர்வுகளை உணரத்தலைப்படாத அரசபீடங்களின் அசமந்தப்போக்கும், விடுதலை வேண்டிய எங்கள் இனத்தின் விடுதலைப் போராளியை காந்திய தேசத்தில் காவு வாங்கியிருக்கிறது.

இந்தக் கொடுந்துயரின் வலி சாந்தனின் குடும்பத்துக்கு வாழ்நாள் வலி என்றபோதும், இழப்பின் ரணங்களைச் சுமந்தவர்களாகவேனும் சாந்தனின் தாயார், தம்பி மதிசுதா உள்ளிட்ட சகோதரர்கள், உறவுகள் அனைவரும் இந்தக் கொடும் வலியின் வாதையிலிருந்து மெல்ல மெல்ல மீள, வல்ல இயற்கை வழிசெய்யட்டும். கனத்த இதயத்தோடு மாவீரன் சாந்தனுக்கு எம் புகழ் வணக்கம்.”என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு... சகோதரனின் பதிவு

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு... சகோதரனின் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025