சிறிலங்காவில் இருந்து அகற்றப்படும் இந்திய இராஜதந்திரி! முக்கிய தருணத்தில் கைமாறும் பதவி

Sri Lanka Australia China India
By Vanan Aug 25, 2023 05:18 PM GMT
Report

சிறிலங்காவில் அதிகாரப்பரவலாக்கம் மற்றும் 13 ஆம் திருத்தம் உட்பட்ட நகர்வுகள் அதிகம் பேசப்பட்டுவரும் நிலையில், இதுவரை சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லேவுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதான செய்தி அவதானத்தை பெற்றுள்ளது.

கோபால் பாக்லேயின் இடத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதராக உள்ள சந்தோஷ் ஜா நியமிக்கப்படவுள்ளதாகவும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றரை ஆண்டுகள் இலங்கையில் பணி

சிறிலங்காவில் இருந்து அகற்றப்படும் இந்திய இராஜதந்திரி! முக்கிய தருணத்தில் கைமாறும் பதவி | Santosh Jha New Indian High Commissioner Sri Lanka

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான கோபால் பாக்லே, கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவருகின்றார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறிலங்காவில் பணியாற்றும் கோபால் பாக்லே, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மிக நெருக்கமான இருதரப்பு உறவை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அந்தப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

முக்கிய தருணத்தில் கைமாறும் பதவி

சிறிலங்காவில் இருந்து அகற்றப்படும் இந்திய இராஜதந்திரி! முக்கிய தருணத்தில் கைமாறும் பதவி | Santosh Jha New Indian High Commissioner Sri Lanka

கோபால் பாக்லேயின் பதவிக்கு இந்திய - ஐரோப்பிய ஒன்றிய சுயாதீன வர்த்தக உடன்படிக்கையில் முக்கிய பங்காற்றிய சந்தோஷ் ஜா, நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விடயத்தில் சீனாவும் இந்தியாவும் தமது செல்வாக்கை செலுத்துவதற்கு முயற்சிக்கும் முக்கியமான தருணத்தில் சந்தோஷ் ஜா, உயர்ஸ்தானிகர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார்.

சீனாவின் மற்றுமொரு நட்பு நாடான பாகிஸ்தானைப் போன்று பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் சிறிலங்கா, சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மூலோபாய கரிசனைகளுக்கு இன்னும் சாதகமாக பதிலளிக்க வேண்டிய சூழல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையின் ஆழ்கடல் துறைமுகங்களில் சீன கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் பெலஸ்ரிக் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ள பின்னணியில் இந்தப் பதவி மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி