சஜித்தை மறைமுகமாக விமர்சித்த பொன்சேகா
Sajith Premadasa
Sarath Fonseka
Samagi Jana Balawegaya
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை, சக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பேருந்து செலுத்துவதன் மூலமோ, பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராகிவிட முடியாது என அவர் சாடியுள்ளார்.
அரசியல் கலாசாரம்
பேருந்தை நன்கொடையாக அளித்து அதனைச் செலுத்துவதன் மூலம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திருப்தி அடைகின்றார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இது நாட்டின் அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும் இவ்வாறான அரசியல் கலாசாரம் கட்டாயம் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்