இலங்கையை வலியுறுத்த ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை - அரசாங்கம் பதிலடி
sri lanka
people
uk
sarath veerasekara
By Shalini
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வேறு எவரும் அதனை தீர்மானிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென்று அதனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
you may like this video?
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்