தீவிரவாத தாக்குதல் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை! அமைச்சர் தகவல்
sri lanka
people
sarath veerasekara
By Shalini
இலங்கையில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல் தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் சட்டத்திடமிருந்து தப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 21 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி