கைது செய்யப்பட்ட அசாத் சாலி தொடர்பில் வெளியான தகவல்
sarath weerasekara
srilANKA
By Vasanth
மாவனெல்லவில் புத்தர் சிலை அழிக்கப்பட்ட சம்பவத்துடன் அசாத் சாலியும் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அசாத் சாலிக்கு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஷரியா சட்டம் மற்றும் அரச சட்டம் பற்றிய சாலியின் சமீபத்திய அறிக்கைகள் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடும் மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.